தமிழ்நாடு முழுவதும் உள்ள மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் 60 லட்சம் பேருக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. 9 மாதங்களில் இந்த பணியை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்களின் விவரங்கள் அடங்கிய QR Code கொண்ட அட்டை வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.