அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி விதிப்பை குறைக்க ஒப்புக் கொண்டுள்ளன.இரு நாட்டு இறக்குமதி ஏற்றுமதிக்கான வரி விகிதங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, ஜெனீவாவில் வைத்து இரு நாட்டு பிரதிநிதிகளும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் பெரும்பாலான ஏற்றுமதி மீதான வரியை 30 சதவிகிதமாக குறைக்க அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளது.அதே போன்று அமெரிக்க இறக்குமதி மீது விதிக்கப்பட்டிருந்த 125 சதவிகித வரியை 10 சதவிகிதமாக குறைக்க சீனாவும் ஒப்புக் கொண்டுள்ளது.தற்காலிகமாக இருதரப்பு வரி விகிதங்கள் குறைக்கப்பட்டாலும் இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார வர்த்தக உறவுகளை சீரமைப்பதற்கான வழிமுறைகள் கொண்டு வரப்படும் என அமெரிக்காவின் நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்தார்.