முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறை எதும் இல்லை என்றும், போதுமான அளவுகளில் மருந்துகள் கையிருப்பில் உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவ துறை சார்ந்த புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கும் பணிகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி நிறைவு பெற்றதாக கூறினார்.