தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைகழகத்திற்கு துணை வேந்தரை நியமிக்க, தமிழ்நாடு அரசு தேடுதல் குழுவை அறிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன், முன்னாள் துணைவேந்தர்கள் சச்சிதானந்தம் மற்றும் விஜயகுமார் ஆகியோரைக் கொண்ட தேடுதல் குழுவை அரசு அமைத்துள்ளது. தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்த பின் முதல் முறையாக தமிழக அரசு நியமித்துள்ள துணைவேந்தர் தேடுதல் குழு இது என்பது குறிப்பிடத்தக்கது. .