திண்டுக்கலில் கொலை வழக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரவுடி தப்பியோட முயன்றதால், போலீசார் காலிலேயே சுட்டுப்பிடித்தனர். கடந்த சனிக்கிழமை முகமது இர்பான்என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ரிச்சர்டு சச்சின் என்பவனை கைதுசெய்த நிலையில், விசாரணைக்கு அழைத்துச் சென்ற போது தப்பியோட முயன்றதால், காலிலேயே சுட்டுப்பிடித்ததாக கூறப்படுகிறது.