சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் 73 ஆயிரத்தை கடந்துள்ளது. 22 கேரட் தங்கத்தின் விலை 440 ரூபாய் அதிகரித்து 73 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 55 ரூபாய் அதிகரித்து 9 ஆயிரத்து 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிலோவிற்கு ஆயிரம் ருபாய் குறைந்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கும், கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து 110 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.