விடியல் பயணம் வெறும் இலவசப் பயணம் அல்ல, அது பெண்களின் பொருளாதார புரட்சி என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது எக்ஸ் பதிவில்,வீட்டை விட்டு வெளியே செல்லவே 50 ரூபாய் தேவை என்ற பொருளாதார தடையை, மகளிருக்கு இலவசப் பேருந்து வசதி வழங்கும் விடியல் பயணம் திட்டம் உடைத்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார். இந்தத் திட்டம் மகளிர் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் ஒட்டுமொத்த முன்னேற்றத்துக்கு ஒரு பயணக் கருவியாக மாறியுள்ளதாக குறிப்பிட்டுள்ள முதல்வர், திட்டம் தொடங்கப்பட்ட 51 மாதங்களுக்குள் விடியல் பயணத்தின் மூலம் மகளிர் ஒவ்வொருவரும் சராசரியாக 50 ஆயிரம் ரூபாய் வரை சேமித்து முடிந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தை ஒரு செலவு என்று கருதாமல், மகளிர் முன்னேற்றத்துக்கான முதலீடு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.