பெட்டி அரசியலுக்காக, தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை மத்திய பாஜக அரசு நிறுத்தி வைத்துள்ளதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார். அமைச்சர் அன்பில் மகேஷ் எழுதிய “தேசிய கல்விக் கொள்கை - 2020 எனும் மதயானை” புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முதலமைச்சர், ஆளுநர் விஷயத்தை போல் கல்வி நிதி தொடர்பான விஷயத்திலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக அறிவித்தார்.