போக்குவரத்து ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட தீபாவளி போனஸ் தொகை, அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி திங்கள்கிழமை இரவே வங்கிகளுக்கு ஊழியர்களின் பட்டியல் அனுப்பப்பட்டு, செவ்வாய்க்கிழமை அன்று வரவு வைக்கப்பட்டது.