சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை கடைகள் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்திக்குறிப்பில், திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் மூலம் அண்ணா சாலையில் அண்ணா அறிவாலயம் அருகிலுள்ள காமதேனு கூட்டுறவு வளாகத்தில் வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஏலம் நடைபெறும் என்பதால், 2 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும், வரிசை எண் 1 முதல் 8 வரையிலான கடைகளுக்கு 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும், 9 முதல் 24 வரை 4 லட்சமும், 26 முதல் 38 வரை 5 லட்சத்து 60 ஆயிரமும், 42 முதல் 50 வரையிலான கடைகளுக்கு 3 லட்சமாகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.