மதுபானக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்றால் மேற்பார்வையாளர் உட்பட ஒட்டுமொத்த பணியாளர்களும் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டாஸ்மாக் மதுபானக் கடைகளில் குவார்ட்டர் பாட்டிலுக்கு 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரையும் ஃபுல் பாட்டிலுக்கு 20 ரூபாயும், பீர் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வண்ணம் உள்ளது. இதுகுறித்து மதுக்கடை பணியாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் பலமுறை எச்சரிக்கை விடுத்தும், கூடுதல் விலை என்பது தொடர்கதையாகவே இருந்து வருகிறது.