60 காவலர்களுக்கு தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை குழுவினர் பயிற்சி அளித்தனர். தமிழகத்தில் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், வெள்ளத்தில் சிக்கியவர்களையும், அவர்களது உடமைகளையும் எவ்வாறு மீட்பது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் 49 ஆண் காவலர்களுக்கும், 11 பெண் காவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை மீட்பு படையைச் சேர்ந்த 4 குழுவினர் சேலம், கடலூர், திருவள்ளூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் தங்கி 5 நாட்கள் தொடர்ச்சியாக பயிற்சி அளிக்கின்றனர்.