தமிழகத்தில் மருத்துவ பாடத்திற்கான புத்தகங்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் பேட்டியளித்த அவர், தமிழ் வழி மருத்துவக் கல்வி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவித்தார்.