சென்னை ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி விடுதியில் மாணவர் விஷ ஊசி செலுத்திக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை கிராமத்தை சேர்ந்த அரவிந்த், சென்னை மருத்துவக்கல்லூரியில் முதுநிலை பொது மருத்துவம் முதலாம் ஆண்டு படித்து வந்த நிலையில், ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாக மாணவர் விடுதியில் நண்பர் மாரிமுத்துவுடன் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.இதனிடையே காலையில் அரவிந்த் அறை கதவை திறக்காததால், அதனை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்ததில், மாணவர் வலது கை கட்டப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தார்.