திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் இன்று தொடங்குகின்றன. தமிழகத்தில் 2002 மற்றும் 2005-ம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி வாக்காளர் கணக்கெடுப்பு பணி நடக்கிறது. அதன்படி, அரசு ஊழியர்கள் ஒவ்வொரு வீடாக சென்று விண்ணப்பப் படிவம் மற்றும் உறுதிமொழி படிவத்தை வழங்குவார்கள். அவற்றை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். இதனடிப்படையில் உருவாக்கப்படும் வரைவு வாக்காளர்கள் பட்டியல் டிசம்பர் 9-ம் தேதியும் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7-ம் தேதியும் வெளியிடப்பட உள்ளன.