சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி திருநாளை ஒட்டி நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்தார். இது குறித்த எக்ஸ் பதிவில், தொழில் வளத்தில் முன்னேற ஆதாரமாக விளங்கும் தொழில் கருவிகள், வாகனங்கள், அறிவை போதிக்கும் புத்தகங்களை வணங்கி வழிபடும் இந்த திருநாள்களில் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.