தீபாவளியை முன்னிட்டு விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆடு விற்பனை அமோகமாக நடைபெற்றது. தீபாவளி நெருங்கி கொண்டிருப்பதால் வியாபாரிகள் ஆடுகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வார ஆட்டு சந்தையில் 6 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாயின. அதே போல கடலூர் மாவட்டம் வேப்பூரில், 5 கோடி ரூபாய்க்கும், புதுக்கோட்டை சந்தப்பேட்டையில், 2 கோடி ரூபாய்க்கும் ஆடுகள் விற்பனையாகியுள்ளன. அதிகாலை முதலே நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ஏராளமான வியாபாரிகள் ஆடுகளை வாங்கி சென்றனர்.