சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் போராட்டத்தால் 750 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் என்ற பெயரில் சங்கத்தை பதிவு செய்ய உத்தரவிட கோரிய மனுவில் சாம்சங் நிறுவனத்தை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நவம்பர் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.