நீலகிரி மாவட்டத்தில் இன்று கன முதல் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும், கோவை, நெல்லை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.