2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. குடியரசு தினம், தெலுங்கு பிறப்பு, மொகரம் ஆகியவை ஞாயிற்று கிழமைகளில் வருவதால், அடுத்தாண்டு மொத்தமாக 23 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக ஜனவரி மாதத்தில் 5 நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.