ஹஜ் புனித பயணத்திற்கான தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து சவுதி அரேபியாவிடம் பேசி விரைவில் தீர்வு காணும்படி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், இந்தியாவுக்கான ஹஜ் ஒதுக்கீட்டை சவுதி அரேபியா திடீரென குறைத்துள்ளது ஏற்கனவே பணம் செலுத்தியுள்ள பல ஹஜ் பயணிகளை கவலையில் ஆழ்த்தியிருப்பதாக முதல்வர் கவலைபட தெரிவித்துள்ளார்.