ஜூலை 27ஆம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 26ஆம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், 27 மற்றும் 28ஆம் தேதிகளில் அரியலூர், பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு பிரதமர் வருகை தர உள்ளதாகவும், கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடிதிருவாதிரை நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.