டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் தொடர்பாக ஊழியர்களின் குறைகளை ஆய்வு செய்ய டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசுத் தரப்பில் மனுத்தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். ஏற்கனவே பணியாற்றும் ஊழியர்களையே மதுபாட்டில்களை திரும்பப் பெறும் பணிகளுக்கும் அமர்த்துவது பணிச்சுமையை அதிகரிக்கும் என்றும், எனவே இப்பணிகளுக்கு தனியாக ஊழியர்களை நியமிக்கக் கோரி டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இதையும் படியுங்கள் : வடசென்னை வளர்ச்சித்திட்ட பணி - சேகர்பாபு ஆய்வு..