தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக, தமிழகம் முழுவதும் 3 நாட்களுக்கு 16 ஆயிரத்து 500 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. சென்னையில் இருந்து மட்டும் 10 ஆயிரத்து 500 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 19ஆம் தேதி போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில், துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் நடைபெறும் ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர், சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பு வெளியாக இருக்கிறது. தீபாவளியை ஒட்டி 5.50 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய வாய்ப்பு இருப்பதால், அதற்கான பணிகளை திட்டமிட இருப்பதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.