தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் டயாலிசிஸ் இயந்திரங்களை இயக்க நிரந்தர பணியாளர்களை நியமிக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. மதுரையை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் தாக்கல் செய்த அந்த மனுவில் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் நோயாளிகளுக்கு பெரும்பாலும் தற்காலிக ஊழியர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி பெறுபவர்களால் டயாலிசிஸ் அளிக்கப்படுவதால் அது தரமற்ற சிகிச்சைக்கு வழிவகுப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது..மேலும் டயாலிசிஸ் இயந்திரங்களை இயக்க நிரந்தர டெக்னீசியன்கள் 7 பேர் மட்டுமே உள்ளதால், கூடுதலாக நிரந்தர பணியாளர்களை நியமிக்க வேண்டும் என மனுவில் கேட்கப்பட்டிருந்தது.