ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சந்தைகளில் பொதுமக்கள் பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்க ஆர்வமாக குவிந்தனர். பூ, பழங்கள், காய்கறிகள், பொரி, மாவிலை, தோரணம், வாழைக்கட்டுளின் விற்பனை அமோகமாக இருப்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.