பாத பூஜை செய்வது நமது கலாச்சாரம் என்பதால் அதனை அனுமதிக்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுக்கு பாஜகவை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சென்னை OMR சாலை காரப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை அரசுப்பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நடத்திய விவகாரத்தில் ஆசிரியர்களை பணியிடை மாற்றம் செய்தது மாணவர்களின் அக்கறைக்கு எதிரானது என்றும் ஆசிரியர்களை பலிகடா ஆக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறினார்.