தமிழ்நாட்டில் மீண்டும் தொடங்கி வைக்கப்பட்ட மினி பேருந்து சேவை திட்டத்தின் மூலம் சுமார் ஒரு கோடி மக்கள் பயன்பெறுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை இயக்கப்படாத 25 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிதாக பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 25 கிலோ மீட்டர் தூரம் வரை மினி பஸ் இயக்கப்படும் என்றும் முக்கிய அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் போன்ற இடங்களுக்குச் சென்று பொதுமக்களை இறக்கிவிட ஏதுவாக மேலும் 1 கிலோ மீட்டர் தூரம் வரை மினி பஸ்களை இயக்கிட வழிவகை செய்யப்பட்டதாகவும் போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.இதையும் படியுங்கள் : WTC இறுதிப்போட்டியில் பவுமாவுக்கு காயம் ஏற்பட்டது