சென்னையில் வடகிழக்கு பருவமழையையொட்டி எதிர்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஐஏஎஸ் அதிகாரிகளுடன் மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர். சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் வடக்கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணிக்கவும், துரிதப்படுத்தவும் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் மண்டல வாரியாக நியமிக்கப்பட்ட 15 ஐஏஎஸ் அதிகாரிகளுடன் சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகளின் ஆலோசனைக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் ஒருங்கிணைந்த பணிகளை மேற்கொள்வது, பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை அடையாளம் காண்பது, நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.