தமிழகத்தில் மூன்று இடங்களில் புதிதாக சுங்கச்சாவடிகள் திறக்கப்பட உள்ள நிலையில், வாகனங்களுக்கான கட்டண விபரங்களை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி விழுப்புரம் நங்கிளி கொண்டான் சுங்கச்சாவடியில் கார், பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் ஒருமுறை சென்று வருவதற்கு 60 முதல் 400 ரூபாய் வரையும், அந்த வாகனங்கள் ஒரே நாளில் திரும்பி வருவதற்கு 95 முதல் 600 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை கரியமங்கலம் சுங்கச்சாவடியில் கார், பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் ஒருமுறை சென்று வருவதற்கு 55 முதல் 370 ரூபாய் வரையும், ஒரே நாளில் திரும்பி வருவதற்கு 85 முதல் 555 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் கிருஷ்ணகிரி நாகம்பட்டி சுங்கச்சாவடிக்கான கட்டண விவரமும் வெளியிடப்பட்டுள்ளது.