லட்சத்தீவு அருகே கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 10 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து எம்.பி. கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசிய கனிமொழி, தனது கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை அவரிடம் வழங்கினார். அதில் குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது கடலில் தவறி விழுந்த தூத்துக்குடியை சேர்ந்த அண்ணாதுரையை தேடி கண்டுபிடிக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.