சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜாமின் வழங்கிய உச்சநீதிமன்றத்தின் நிபந்தனை படி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கையெழுத்திட்டார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம், திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்தது. இந்நிலையில் அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள செந்தில் பாலாஜி காலை 11 மணியளவில் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வந்து கையெழுத்திட்டார்.