பழமை வாய்ந்த கோவில்களை பாதுகாப்பதில் மத்திய தொல்லியல் துறை போதிய அக்கறை காட்டுவதில்லை என உயர்நீதிமன்ற கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது. தஞ்சை பெருவுடையார் கோவிலில் பூட்டியே கிடக்கும் இந்திரன் சன்னிதியை திறக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், இவ்வாறு கூறியது.