மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ”வாட்டர் பெல்” எனப்படும் தண்ணீர் இடைவேளை விரைவில் நடைமுறைக்கு வருகிறது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கையில், காலை 11 மணி, நண்பகல் 1 மணி மற்றும் பிற்பகல் 3 மணிக்கு வாட்டர் பெல் அடித்து, வகுப்பறையில் மாணவர்கள் தண்ணீர் குடிக்க 2 முதல் 3 நிமிடங்கள் ஒதுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையும் படியுங்கள் : தமிழில் வழிபாடு நடத்துவதில் என்ன பிரச்சனை? - சீமான்