குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களை 2-வது முறையாக அதிகரித்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி குரூப் 4 நிலையிலான தமிழக அரசு பணிக்கு கூடுதலாக 2 ஆயிரத்து 208 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் தற்போது குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 932 ஆக உயர்ந்துள்ளது. இதனால் குரூப் 4 பிரிவில் தேர்வு எழுதியவர்கள் மிகழ்ச்சியடைந்துள்ளனர்.