ஒரு லட்சத்து 20 ஆயிரம் கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க தமிழ்நாடு அரசு 247 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்மூலம் மத்திய அரசு நிர்ணயித்துள்ள இரண்டாயிரத்து 919 ரூபாய் 75 பைசாவுடன், மாநில அரசின் ஊக்கத் தொகையான 215 ரூபாய் சேர்த்து கரும்பு டன் ஒன்றுக்கு மூன்றாயிரத்து 134 ரூபாய் 75 பைசா கிடைக்கும்.