நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான 600 கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்ட நியோமேக்ஸ் நிதி நிறுவனம் மோசடி புகாரில் சிக்கியது. பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு திருப்பி தராததால் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரில் நியோமேக்ஸ் நிதி நிறுவன இயக்குநர்களை போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில், தற்போது 600 கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.