தமிழகத்தில் நேற்று 8 இடங்களில் வெயில் சதமடித்தது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105.08 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இதேபோல், சென்னை நுங்கம்பாக்கம், கடலூர், மதுரை நகரம், நாகை, தஞ்சை, தூத்துக்குடி, வேலூர் ஆகிய இடங்களில் வெயில் சுட்டெரித்தது.