தமிழகத்தில் இன்று 4 இடங்களில் வெயில் சதம் அடித்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுரை விமான நிலையத்தில் 102.92 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து மதுரை நகரத்தில் 101.84 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும் கரூர் பரமத்தியில் 101.3 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும் திருச்சியில் 100.58 டிகிரி ஃபாரன்ஹீட் அளவிலும் வெயில் சுட்டெரித்தது.