கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னேற்பாடுகளை செய்ய அறிவுறுத்தியுள்ள அரசு, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு, இயந்திரங்கள், உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தியுள்ளது.