தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, வரும் 2ஆம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 3ஆம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் மற்றும் புதுவை, காரைக்காலில் கனமழை பெய்யக் கூடும் என்றும் வரும் 4ஆம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும். வரும் 5ஆம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் காரைக்காலில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது..