தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் நாளையும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யும் என்றும் நாளை மறுநாள் திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.