தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து மத்திய அரபிக்கடல் பகுதியில் நாளை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் தென் தமிழக கடலோர பகுதியின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும், தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியிலும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் இன்று முதல் 16ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.