தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் முன்பதிவு செய்து பயணத்தை மேற்கொள்ள அரசு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தி உள்ளது. இந்தாண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ஆம் தேதி வருவதை ஒட்டி பேருந்துகளில் செல்வோர் இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. TNSTC இணையதளம் மற்றும் TNSTC செயலி மூலமாக பயணிகள் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 90 நாட்களுக்கு முன்னதாக அரசு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்வதன் மூலம் பயணிகள் நெருக்கடியின்றி பயணம் மேற்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.