தங்கம் விலை தொடர்ந்து ஏறு முகத்தில் உள்ள நிலையில் கடந்த 5 நாட்களில் சவரனுக்கு 2 ஆயிரத்து 320 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 225 ரூபாய்க்கும், சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து 57 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. தொடர்ந்து நான்கு நாட்களாக வெள்ளி ஒரே விலை மாற்றமில்லாமல் நீடிக்கிறது. ஒரு கிராம் வெள்ளி 101 ரூபாய்க்கும், ஒரு கிலோ 1 லட்சத்து ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.