சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது. 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 915 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 71 ஆயிரத்து 320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 119 ரூபாய்க்கும், கிலோ 1 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.