சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 640 ரூபாய் அதிரடியாக குறைந்துள்ளது. 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 205 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 775 ரூபாய்க்கும், சவரனுக்கு ஆயிரத்து 640 ரூபாய் குறைந்து 70 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் வெள்ளியின் விலை கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து109 ரூபாய்க்கும், கிலோ 1 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.