கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து புதுக்கோட்டை, நாகை, ராமநாதபுரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை ஒட்டி மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். அதன்படி கடல் மிகுந்த சீற்றத்துடன் காணப்படுவதால் 4 மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை பாதுகாப்பாக கரைகளில் நிறுத்தி வைத்துள்ளனர்.