நவம்பர் 2வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் வழக்கத்தை விட 23 சதவீதம் அதிக மழைப் பொழிவுக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.