ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கான அதிகாரம் குறித்து சமீபத்தில் உச்சநீதிமன்றம் கூறிய கருத்திற்கு எதிராக துணைக் குடியரசுத் தலைவர் ஜெக்தீப் தங்கரின் கருத்துக்கு திமுக துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவா கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது எக்ஸ் தள பக்கத்தில், அரசியலமைப்புதான் அனைத்தையும் விட உயர்ந்தது என்பதை மறந்துவிடக் கூடாது என பதிவிட்டுள்ளார். மேலும், ஆளுநர்கள் மற்றும் குடியரசுத்தலைவர்களின் பங்கு என்ன என்பது குறித்து உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு சட்ட பிரிவு 142 ஐ பயன்படுத்தி சமீபத்தில் தெளிவு படுத்தி உள்ளது எனவும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்த துணைக்குடியரசுத் தலைவர் கருத்துகள் நெறிமுறையற்றவை எனவும் தெரிவித்துள்ளார்.